காவற்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவற்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள்!!

"காவற்துறையினரும், பாதுகாப்புப் படையினரும், தொடர்ச்சியாகப் பயங்கரவாதத் தாக்குதல்களிற்கும், தாக்குதல் முயற்சிகளிற்குள்ளும் சிக்கியுள்ளனர்" என நேற்றைய சோம்ப்ஸ் எலிசேவின் தோல்வியடைந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், உள்துறை அமைச்சர் ஜெரார் கொலோம்ப் தெரிவித்திருந்தார்.
 
இராணுவ வீரர்கள் மற்றும் காவற்துறை வீரர்கள் மீதான தாக்குதல்கள் 2012 இலேயே ஆரம்பித்து விட்டன.
 
11 மார்ச் 2012 - இராணுவப் பொறியியற் பிரிவின் மாரெசால் Imad Ibn Ziaten, மற்றும் Abel Chennouf, Mohamed Legouad  ஆகிய இராணுவ வீரர்கள் துலுசில் பயங்கரவாதி மொகமத் மேராவினால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
7 ஜனவரி 2015 - Franck Brinsolaro, Ahmed Merabet ஆகிய காவற்துறை வீரர்கள், சார்லி எப்தோ மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது பயங்கரவாதிகள் குவாச்சி சகோதரர்களினால் காட்டுமிராண்டித் தனமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
 
 
13 ஜுன் 2016 - Magnanville (Yvelines) இல் ஒரு காவற்துறை வீரனையும் அவரது மனைவியையும் , அவர்களது வீட்டில் வைத்துப் பயங்கரவாதி லாரோசி அபெல்லா, கொடூரமாகப் படுகொலை செய்திருந்தார்.
 
20 ஏப்ரல் 2017 - பயங்கரவாதி Karim Cheurfi சோம்ப்ஸ் எலிசேயில் வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், காவற்துறை வீரன் Xavier Jugelé படுகொலை செய்யப்பட்டார்.
 
இது தவிர நேற்றைய தாக்குதல்கள், லூவ்ர் அருங்காட்சியகத் தாக்குதல்கள், பல்பொருள் அங்காடித் தாக்குதல்கள், எனப் பல தாக்குதல்கள் காவற்துறையினராலும் இராணுவத்தினராலும் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை