சாதி பிரச்னையால் கல்லூரி மாணவர் தற்கொலை: உயிருக்கு போராடும் காதலியின் உருக்கமான கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாதி பிரச்னையால் கல்லூரி மாணவர் தற்கொலை: உயிருக்கு போராடும் காதலியின் உருக்கமான கடிதம்

திருச்சி: ஈரோடு மாவட்டம் சித்தோடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. வக்கீல் குமாஸ்தா.

இவரது மகன் பிரகாஷ் (21), திருச்சி சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். ஈரோடு பவானி மெயின்ரோடு அல்லிநகரை சேர்ந்தவர் பாலசந்தர்.

இவரது மகள் அட்சயா (17). ஈரோடு சத்திரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

பிரகாஷின் அக்காவிற்கு திருமணமாகி அட்சயா வீட்டருகே வசித்து வருகிறார். அக்காவை பார்ப்பதற்காக பிரகாஷ் அடிக்டி சென்றபோது அட்சயாவிற்கும் பிரகாஷிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் அட்சயாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இருவரும்வேறு வேறு சாதி என்பதால் காதலுக்கு அட்சயாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இதனால் அட்சயாவை கடந்த வாரம் பெரம்பலூரில் உள்ள அக்கா வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர்.

காதலனை மறக்க முடியாத அட்சயா, நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்காமல் திருச்சிக்கு புறப்பட்டு வந்தார். பிரகாஷிற்கு போன் செய்து சந்தித்தார்.

அவரிடம் நிலையை விளக்கினார். அன்று முழுவதும் இருவரும் பைக்கில் சுற்றி வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் அருகே பூச்சி கொல்லி மருந்து வாங்கி வந்து குடித்து நேற்று மயங்கி கிடந்தனர். இதில் பிரகாஷ் இறந்தார்.

அட்சயா, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அருகில் கிடந்த அட்சயாவின் பேக்கில் போலீசார் சோதனை செய்த போது, அதில் கிப்ட் கவர் போட்ட நோட்டு இருந்தது.

அதில் கூறியிருப்பதாவது: ஹாய் டார்லிங், உனக்காக நான் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன் டா, அந்த உயிரை எல்லோரும் சேர்ந்து கொன்னுடுவாங்கனு பயமாக இருக்கு டா, எங்க வீட்டில் யாருமே சரியில்லை டா.

உனக்காக மட்டும் தான் உயிராய் இருக்கேன். அம்மா என்னை ஊருல கொண்டு போய் விடுறேன்னு சொல்றாங்க.

எதுக்காகவும், யாருக்காவும் என்ன வேண்டாமுன்னு சொல்லிறாத. பிளீஸ் நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என்னோட லவ்வை எப்படி புரிய வைப்பேன்னு தெரியல. ஆனால் ஒரு நாள் கண்டிப்பா உனக்கு என்னோட லவ் புரியும்.

பேபி நீ எப்போதும் என் பக்கத்திலேயே இருக்கணும்டா, அதுவும் லைப் லாங்கா இருப்பியா, நீ இருப்ப என முழு நம்பிக்கை இருக்கு. உன்னுடன் பேசிட்டே இருக்கணும் போல இருக்கு.

சீக்கிரமா வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோடா பிளீஸ்.

என்ன ஆனாலும் நீ தான் என் ஹஸ்பண்ட், நீ எப்ப எனக்கு கிடைப்பேனு தெரியல. ஆனா நான் உனக்கு எப்பையோ கிடைச்சிட்டேன்.

உன்னை அழகா ஒரு குழந்தை போல பார்த்துக்குவேன். என்னை ஒரு முறையாவது அடிங்க.

சொன்னா கேக்கணும், அன்னைக்கு ரூம்ல உங்கள எட்டி உதைச்சிட்டேன், பிளீஸ் மன்னிச்சிடுங்க. சாரி, உங்க கிட்ட நான் கோபத்தில ஏதாவது தப்பாக நடந்திருந்தால், ஏதாவது பேசி இருந்தால் சாரி டா, நீ என்னை என்ன வேணாலும் பண்ணிக்கடா, ஆனால் எனக்கு பிடிக்காத மாதிரி மட்டும் நடந்துக்காத என்னை அவாய்ட் பண்ணிடாத.

இவ்வாறு பல பக்கங்களில் கடிதம் எழுதி உள்ளார்.

விஷம் குடிக்குமுன் இருவரும் திருச்சியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்குள் சண்டை நடந்திருக்கலாம் என தெரிகிறது.

அது பற்றி தான் அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். ரூமில் உன்னை உதைச்சிட்டேன் என குறிப்பிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்டு உள்ளார்.

அட்சயா தனது காதலனை, பேபி என்றும், வாடா, போடா, உன்னை குழந்தை மாதிரி பார்த்துக்குவேன் என்றும் உருக்கமாக எழுதி உள்ளார்.

.

மூலக்கதை