டிஜெஎஸ் கல்வி குழுமத்துடன் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஜெஎஸ் கல்வி குழுமத்துடன் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் கல்வி குழுமத்துடன் அமெரிக்காவை சேர்ந்த பேர்ரி வேமில்லர் என்ற நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கான விழா டிஜெஎஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி. ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கல்வி குழும இயக்குனர் கபிலன், கல்லூரி முதல்வர் பழனி முன்னிலை வகித்தனர்.


“கல்லூரி மாணவர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பேர்ரி வேமில்லர் நிறுவனத்தின் சார்பாக பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சி, திறன் வளர் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் பன்னாட்டு வேலை வாய்ப்பைபெற வழி செய்யும்”  என டி. ஜெ. கோவிந்தராஜன் கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி. ஜெ. கோவிந்தராஜன் பேர்ரி வேமில்லர் நிறுவன கலாசாரம் மற்றும் மக்கள் முன்னேற்ற இயக்குனர் லட்சுமி பிரியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

.

மூலக்கதை