உயிருக்கு போராடிய நிலையில் காதலனை கரம்பிடித்த காதலி!

PARIS TAMIL  PARIS TAMIL
உயிருக்கு போராடிய நிலையில் காதலனை கரம்பிடித்த காதலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்துள்ள கேட்டீ, தன் வாழ்வில் பல ஆசைகளும் கனவுகளும் கொண்டிருந்தாள். 
 
ஆனால் விதி அவளின் வாழ்வில் வேறு மாதிரியாக விளையாடியது என்றே கூற வேண்டும். அவள் ஆசைப்பட்ட அனைத்தும் மெய்யாகவில்லை என்றாலும், இறக்கும் தருவாயில் மிகப்பெரும் ஆசையொன்று நிறைவேறியுள்ளது.
 
சக மாணவிகளைப் போன்று ஏராளமான கனவுகளை சுமந்துக் கொண்டு திரிந்த கேட்டீக்கு, நிக் காட்வின் என்ற ஆண் நண்பர் இருந்தார். 
 
எல்லோரையும் போலவே எதிர்காலம் குறித்த ஏகப்பட்ட நம்பிக்கையை கொண்டிருந்த கேட்டீக்கு மூளையில் கேன்சர் கட்டி கண்டறியப்பட்டது முதலே, நம்பிக்கை சிறகுகள் ஒவ்வொன்றாக உதிரத் தொடங்கின எனலாம். 
 
நாளுக்கு நாள் பலவீனமடைந்து வந்த நிலையில், கேன்சர் கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 
மூளையில் இருந்து கேன்சர் கட்டி வெற்றிகரமாக நீக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக நுரையீரலை கேன்சர் செல்கள் பாதித்ததை அடுத்து, நுரையீரல் புற்றுநோய் தீவிரமடையத் தொடங்கியது. 
 
ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு கனவுகள் சிதைந்து, இறக்கைகள் இல்லாத பறவையாய் சோர்ந்துக் கிடந்தவருக்கு, காதலின் பசுமை மட்டும் மனதில் நீங்கவில்லை.
 

மூலக்கதை