சட்டசபையில் நிறைவேறியது ஜி.எஸ்.டி மசோதா! மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு

விகடன்  விகடன்
சட்டசபையில் நிறைவேறியது ஜி.எஸ்.டி மசோதா! மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு

ஜூலை மாதம் 1-ஆம் தேதி இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜி.எஸ்.டி மசோதா குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், 'ஜி.எஸ்.டி மசாதா மீதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, அதை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. அனைத்துத் தரப்பினர் கோரிக்கையை அடுத்துதான் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு அப்படி செய்யவில்லை. மேலும், மசோதாவை தற்போது நிறைவேற்றாமல் சட்டமன்றத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களின் கருத்தை பெற்ற பிறகே மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்' என்று பேசினார். 

ஆனால், அவர் எதிர்ப்பையும் மீறி மசோதா  நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

மூலக்கதை