அதிரடியாக உயர்ந்தது பங்குச்சந்தை: உச்சத்தில் சென்செக்ஸ்

விகடன்  விகடன்
அதிரடியாக உயர்ந்தது பங்குச்சந்தை: உச்சத்தில் சென்செக்ஸ்

தொடர் சரிவில் சிக்கித்தவித்துவந்த இந்தியப் பங்குச்சந்தை, இன்றைய வர்த்தக முடிவில் அதிகரித்து நிறைவடைந்தது.

உலகச் சந்தையில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கமாகவே இருந்துவந்த பங்குச்சந்தை, இன்றைய நாளின் இறுதியில் உச்சத்தில் நிறைவடைந்தது. இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 255 புள்ளிகள் உயர்ந்து, 31,311 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 69 புள்ளிகள் உயர்ந்து, 9,657 புள்ளிகளாகி நின்றது.

ஜிஎஸ்டி மசோதா, வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து தாக்கல் அமலாவதையொட்டி, வர்த்தகத்தில் பல பங்குகளின் மீதான முதலீடுகள் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளதால், இன்றைய வர்த்தகம் உச்சத்தில் நிறைவடைந்ததாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை