திமுகவின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது

தி இந்து  தி இந்து
திமுகவின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது

திமுகவின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையே சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடந்த ஜூன் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் இன்று திமுகவின் எதிர்ப்பை தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டியின் குறைகளை திமுக எடுத்துக் கூறியது. ஜிஎஸ்டி மசோதாவை தற்போது நிறைவேற்ற வேண்டாம் என்றோம். ஆனால், அதை அரசு ஏற்ற்க்கொள்ளவில்லை. ஜிஎஸ்டி குறித்து தொழில் அமைப்புகள், வணிகர்களிடம் கருத்தைக் கேட்கவில்லை. இதனால் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம்'' என்றார்.

Keywords: திமுகவின் எதிர்ப்பை மீறிதமிழக சட்டப்பேரவைஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது

மூலக்கதை