மோடியைப் பற்றி திருமாவளவன் குறைகூறுவதை நிறுத்திக்கொள்வது நல்லது: தமிழிசை

தி இந்து  தி இந்து
மோடியைப் பற்றி திருமாவளவன் குறைகூறுவதை நிறுத்திக்கொள்வது நல்லது: தமிழிசை

மோடியைப் பற்றி திருமாவளவன் குறைகூறுவதை நிறுத்திக்கொள்வது நல்லது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பணப் பரிமாற்றம் நடைபெற்றதால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எதிர்ப்புகளையும் மீறி ஆதிதிராவிடர் மக்களுக்கான ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. எனவே, பிரதமரைப் பற்றி திருமாவளவன் குறைகூறுவதை நிறுத்திக்கொள்வது நல்லது'' என்றார்.

Keywords: மோடியைப் பற்றி திருமாவளவன்குறைகூறுவதை நிறுத்திக்கொள்வது நல்லதுதமிழிசை

மூலக்கதை