பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் மூலம் மதவாதம் மற்றும் இனவாத ரீதியான கருத்துக்களை பதிவு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
 
பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் மதவாதம் மற்றும் இனவாதம் பரப்புவோர் குறித்து விசேட பொலிஸ் பிரிவின் ஊடக விசாரணை நடத்தப்படும்.
 
குற்றம் செய்தவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை