ராகுல் பிறந்த நாள் பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராகுல் பிறந்த நாள் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ராகுல் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தனது 47வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தலைவர்களும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடன் ராகுல் நலமாக வாழ வேண்டும் என மோடி அதில் தெரிவித்துள்ளார்.

பிறந்த தினத்தை முன்னிட்டு தனது பாட்டியை சந்திப்பதற்காக ராகுல் இத்தாலி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை