ராகுல் காந்தி பிறந்த நாள்: மோடி, மம்தா வாழ்த்து

தி இந்து  தி இந்து
ராகுல் காந்தி பிறந்த நாள்: மோடி, மம்தா வாழ்த்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 19-ம் தேதியான இன்று (திங்கட்கிழமை) தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ''காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் பூரண நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்'' என்று ட்வீட் செய்துள்ளார்.

Keywords: ராகுல் காந்தி பிறந்த நாள்மோடிமம்தா வாழ்த்து

மூலக்கதை