டென்சன் குறைக்க இனி வரப்போகுதாம்  சிரிப்புப் பல்கலைக்கழகம்!

விகடன்  விகடன்
டென்சன் குறைக்க இனி வரப்போகுதாம்  சிரிப்புப் பல்கலைக்கழகம்!

பெங்களூரில் சிக்பள்ளாபுரா மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தில் சிரிப்பு பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

மனசுக்குள் புயலே அடித்தாலும் உற்சாகமாக இயங்கவைப்பது சிரிப்புதான். அகம் மகிழ்ந்து சிரிப்பதால் உடலை நோய் அண்டாமல் தடுக்கலாம். ஆம் சிரிப்பதற்காகவே ஒரு பல்கலைக்கழகம் அமையவிருக்கிறது. அதுவும் கர்நாடகாவில். உலகில் இதுதான் முதல் சிரிப்புப் பல்கலைக்கழகமாம். பெங்களூரில் சிக்பள்ளாபுரா மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தில் சிரிப்புப் பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பல்கலையை இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வேலைகள் நடக்கின்றன. உலகளவில் இயங்கி வரும் சிரிப்பு மன்றங்களும் இப்பல்கலை உருவாகக் காரணம். 65 நாடுகளைச் சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் பெங்களூரில் கூடி இந்த நல்ல முடிவை எடுத்துள்ளன. இங்கு மண் குடிசைகள் வகுப்பறைகளாக அமையவுள்ளன. பல்கலையைச் சுற்றி வரும்போதே தானாகச் சிரிப்பு வர வேண்டுமாம். மத்திய, மாநில அரசு மற்றும் தனியாரின் ஒத்துழைப்போடு இதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன . பெருநகர வேகம் மக்களை இயந்திரங்களாக மாற்றிக் கொண்டிருக்க...கிராமம்... நகரம் என்று எங்கும் பரவிக்கிடக்கிறது டென்சன் வியாதி. இப்படியொரு பல்கலைக்கழகம் காலத்தின் கட்டாயம். புன்னகையுடன் வரவேற்போம். 

 

மூலக்கதை