நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம்: வாழ்நாள் முழுவதும் இலவசமாக பறக்க குழந்தைக்கு சலுகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம்: வாழ்நாள் முழுவதும் இலவசமாக பறக்க குழந்தைக்கு சலுகை

புதுடெல்லி: சவுதி அரேபியா, தம்மம் பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் 2. 55 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

அவசர மருத்துவ உதவி அறிவிக்கப்பட்டது. இதையடு அடுத்து, விமானத்தில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க தயாராகினர்.

இதனால்  கேரளாவில் தரையிறங்க வேண்டிய விமானத்தை, அவசர அவசரமாக மும்பைக்கு திசை திருப்பினர்.

அதற்குள், விமானத்திலேயே பெண்ணுக்கு மருத்துவ உதவியாளர்கள் பிரசவம் பார்த்தனர். இதில், நடுவானில் பறக்கும் விமானத்திலேயே பெண்ணுக்கு சுகபிரசவத்தில் குழந்தை பிறந்தது.

மும்பையில் தரையிறங்கியதும், தாயையும் சேயையும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு, மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம், 90 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12. 45 மணிக்கு கேரளாவில் தரையிறங்கியது.
இதுகுறித்து விமான நிறுவனம் சார்பில் வெளியிட்ட செய்தியில், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது.

அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் எங்களது விமானத்தில் இலவசமாக பயணம் செய்து கொள்ள சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை