2018ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை இல்லை...!

PARIS TAMIL  PARIS TAMIL
2018ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இல்லை...!

டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி-20 கோப்பை நடந்து வருகிறது. இது வரை நடந்த டி-20 உலகக்கோப்பை போட்டிகளில், மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
 
அதேபோல், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு, இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை நடந்தது. அதில், மேற்கு இந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், தற்போது அடுத்த ஆண்டு நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நிறைய தொடர்களில், அணிகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதனால், வருகின்ற 2020 ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 
 
தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலிய நாட்டில், அடுத்த டி-20 கோப்பை நடப்பதற்கான வாய்ப்புள்ளது. வருகின்ற 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரும், 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரும் நடக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை