ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ., வேட்பாளர் இருநாட்களில் அறிவிப்பு?

தினமலர்  தினமலர்
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ., வேட்பாளர் இருநாட்களில் அறிவிப்பு?

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் இன்னும் இரு நாட்களுக்குள் (ஜூன் 21) அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்:


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம், ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் துவங்கிவிட்டது; இதையடுத்து, ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இரு நாட்களில்...


மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, ஜனாதிபதியை போட்டியின்றி தேர்வு செய்ய விரும்புகிறது. இதற்காக, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கைய நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை, பா.ஜ., அமைத்துள்ளது. இந்நிலையில் பா.ஜ., கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நபர் யார் என, வரும் 21ம் தேதிக்குள் (ஜூன், 21) அறிவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை