கனடா பிரதமரை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்! காரணம் என்ன?

PARIS TAMIL  PARIS TAMIL
கனடா பிரதமரை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்! காரணம் என்ன?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து அவருக்குப் பாராட்டுகளை குவித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
 
சர்வதேச அளவில் பலராலும் பாராட்டப்பட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, கனடாவின் ராணுவ பட்ஜெட்டை அதிகரித்தற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 
 
கனடாவின் ராணுவ பட்ஜெட்டில், அடுத்த பத்தாண்டுக்கான பாதுகாப்புக்கான நிதியை 70% வரை உயர்த்தியது சிறப்பான செயல் என்கிறார் ட்ரம்ப். 
 
மேலும், இதன் மூலம் அமெரிக்கா- கனடா நாடுகளின் இடையேயான உறவு பலம் பெற்றிருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
 
 ட்ரூடே-வை ட்ரம்ப், தொலைபேசியின் வாயிலாகப் பாராட்டியுள்ளார் என வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ செய்தி தகவல் மையம் தெரிவித்துள்ளது. 
 
அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலின் பேரிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு கனடா தனது பாதுகாப்பு நிதியை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

மூலக்கதை