லண்டனில் பயங்கர வெடிச்சத்தம்: அலறிய மக்களால் பரபரப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
லண்டனில் பயங்கர வெடிச்சத்தம்: அலறிய மக்களால் பரபரப்பு!

லண்டனில் Thames நதி அருகில் பயங்கர சத்தத்துடன் வானவேடிக்கை கொண்டாட்டத்தில் வெடிகள் வெடித்ததை தீவிரவாத தாக்குதல் என மக்கள் நினைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
 
இதையடுத்து நகர மக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள Thames நதி அருகில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
 
இதை தீவிரவாத தாக்குதல் என நினைத்து பலர் பயந்து போனார்கள்.
 
ஆனால், வானவேடிக்கையை வெடித்து கொண்டாடும் விதமாக பல்வேறு கலர்புல் வெடிகள் வெடிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
 
இதுகுறித்து Arif என்ற இளைஞர் தனது டுவிட்டர் பக்கத்தில், வானவேடிக்கை அருமையாக இருந்தது.
 
ஆனால் திடீரென ஏற்பட்ட சத்தத்தை வைத்து அருகிலிருந்த திரையரங்கில் இருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடப்பதாக நினைத்து பயந்து விட்டார்கள் என கூறியுள்ளார்.
 
Ella என்ற பெண் தனது டுவிட்டர் பக்கத்தில், மிக பெரிய வெடிச்சத்தம் கேட்டது. பின்னர் எதிர்பாராதவிதமாக வானவேடிக்கை நிகழ்வுகள் நடந்துள்ளது என கூறியுள்ளார்.
 
Ian Maclure என்ற நபர் கூறுகையில், மிகப்பெரிய வானவேடிக்கை நிகழ்வில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு பலர் உறைந்து போனார்கள். லண்டனே பரபரப்பானது என கூறியுள்ளார்.

மூலக்கதை