இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்

கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக நடந்துவந்த சண்டை கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை அடைந்தது. இந்த போரில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.

இந்த போரின்போது பலர் காணாமல் போயினர். அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போரின்போது சரணடைந்தவர்களின் நிலைகுறித்து இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இதை வலியுறுத்தி தமிழர்கள் வாழும் பகுதிகளில் சாலை மறியல், உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிபரை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நீண்ட போராட்டத்துக்கு பின்னர், உறவினர்கள் அடங்கிய போராட்ட குழுவினரை அதிபர் சிறிசேன நேற்று சந்தித்து பேசினார். இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அவர் உறுதியளித்தார்.

இதுதொடர்பாக  கொழும்பு நகரில் இன்று நடைபெறும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிறிசேன ஆலோசனை நடத்துக்கிறார்.

இதில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

.

மூலக்கதை