தென் ஆப்ரிக்காவுடன் இன்று ேமாதல் பாகிஸ்தான் எழுச்சி பெறும்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்காவுடன் இன்று ேமாதல் பாகிஸ்தான் எழுச்சி பெறும்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது நம்பிக்கை

பர்மிங்ஹாம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்,  7வது லீக் போட்டியில், பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா அணிகள் (குரூப் பி) மோதுகின்றன. முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி கண்ட  பாகிஸ்தான், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.   இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘ஒரு கேப்டனாக நம்பிக்கையுடன் உள்ளேன்.

அணியும் நன்றாக  ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என அணி வீரர்களிடம் கூறியிருக்கிறோம்.

தொடரில் பாகிஸ்தான் மீண்டும்  எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக சில தவறுகளை செய்து விட்டோம். அதை ஒப்புக்கொள்கிறோம்.

இந்தியா-பாகிஸ்தான்  போட்டிகள் என்றாலே அழுத்தம் நிறைந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் 4-5 வீரர்கள் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக  விளையாடினர்.

அடுத்த 2 போட்டிகள் எங்களுக்கு முக்கியமானது (இன்று தென் ஆப்ரிக்காவுடன், 12ம் தேதி இலங்கையுடன்). அதில் சிறப்பாக  விளையாடுவோம்.

தென் ஆப்ரிக்காவின் ரபாடா சிறப்பாக பந்து வீச கூடியவர். அவரது வீடியோக்களை பார்த்து சில திட்டங்களை வகுத்துள்ளோம்’  என்றார்.



விளையாடும் லெவனில் மாற்றம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அகமது ஷெசாத் (பார்ம் அவுட்), வேகப்பந்து வீச்சாளர்  வகாப் ரியாஸ் (காயம்) விளையாட மாட்டார்கள். இதனால் அசார் அலியுடன் தொடக்க வீரராக பகர் சமானும், வகாப் ரியாசுக்கு பதிலாக ஜுனைத்  கானும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகாப் ரியாஸ் தொடர் முழுவதிலும் இருந்தே விலகி விட்டதால், இளம் வேகப்பந்து வீச்சாளர்  ரம்மான் ரேசும் பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முகமது ஆமீர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார்.

.

மூலக்கதை