தென் ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தானுக்கு அப்ரிடி அறிவுரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தானுக்கு அப்ரிடி அறிவுரை

லாகூர்: வாழ்வா? சாவா? என்ற நெருக்கடியான நிலையில் இன்று தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின்  முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தென் ஆப்ரிக்காவிடம் வலுவான பேட்டிங் ஆர்டர்  உள்ளது.

அவர்களின் பந்து வீச்சில் அனல் பறக்கும். ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் முன்னணியில் இருப்பவர்கள்.   அவர்கள் இருவரும் அதிக தாக்கம் ஏற்படுத்தி விடாதவாறு பாகிஸ்தான் பார்த்து கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தங்கள் மனதை  ‘ரிலாக்ஸாக’ வைத்து கொண்டு நேர்மறையான மனப்போக்குடன் விளையாட வேண்டும்.

குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் ெபாறுப்பு  எடுத்து கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரன் ரேட்டை உயர்த்துவதற்கான எந்த துப்பும் இல்லாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்  உறைந்து போய் இருந்தனர். எனவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் குறைந்த எண்ணிக்கையிலான ‘டாட்’ பந்துகளை மட்டுமே  விளையாட வேண்டும்.

தென் ஆப்ரிக்கா பீல்டிங்கிலும் வலுவான அணி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

2 விதமான மனநிலையில் இருந்தால்,  தென் ஆப்ரிக்க பீல்டர்கள் நிச்சயம் சிரமம் கொடுத்து விடுவார்கள்’ என்றார்.

.

மூலக்கதை