நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி

பர்மிங்ஹாம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருது வென்றார். 2007ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் போட்டியில் விளையாடினாலும் அவரது பேட்டிங்கில் தடுமாற்றம் இல்லை.

காய்ச்சல் காரணமாக சாம்பியன்ஸ் டிராபிக்கான 2 பயிற்சி போட்டிகளிலும் கூட அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் அளித்த பேட்டி: இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்தோம்.

ரோகித் சர்மா-ஷிகார் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

இதனால் எங்களால் மிகுந்த ஆழமாக பேட்டிங் செய்ய முடிந்தது.

கோஹ்லி இன்னிங்ஸை சிறப்பாக நிறைவு செய்தார். எனது கேட்சை தவற விட்டது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான் (8 ரன்களில் இருந்தபோது ஹசன் அலி கோட்டை விட்டார்).

அதை பயன்படுத்தி கொண்டு நன்றாக விளையாடினேன். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடப்பது மிகப்பெரிய போட்டி.

அதில் நான் நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது. இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையுடன் இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் (ஜுன் 8ம் தேதி) சிறப்பாக விளையாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை