இலங்கையை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களை குவித்தது. 
 
தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அம்லா சதம் (103) விளாசினார். டூ பிளசிஸ் 75 ரன்களை குவித்தார். இலங்கை அணி சார்பில் பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
இதையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைய, தென் ஆப்பிரிக்க அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இலங்கை அணி சார்பில் தரங்கா 57 (69), டிக்வெல்லா 41 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெரேரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 (66) ரன்களை குவித்திருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் 8.3 ஓவர்களுக்கு 27 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சரித்த இம்ரான் தாஹிர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

மூலக்கதை