இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி உலக கோப்பை ஹீரோயிசத்தை மீண்டும் காட்டுமா வங்கதேசம்?: வலுவான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி உலக கோப்பை ஹீரோயிசத்தை மீண்டும் காட்டுமா வங்கதேசம்?: வலுவான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

லண்டன்: மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று கோலாகலமாக  தொடங்குகிறது. ‘கட் ஆப்’ தேதியான கடந்த 2015 செப்டம்பர் 30ம் தேதியன்று ஒரு நாள் தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருந்த அணிகள் கலந்து  கொள்கின்றன.

அவை தலா 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து,  நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம்பெற்றுள்ளன.

12 லீக், 2 அரையிறுதி, ஒரு  இறுதி போட்டி என மொத்தம் 15 போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதி போட்டி வரும் 18ம் தேதி நடக்கிறது.



 இந்த தொடருக்கான மொத்த பரிசு தொகை 29 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 14 கோடியும், இறுதி போட்டியில்  தோல்வியடையும் அணிக்கு 7 கோடியும் பரிசாக கிடைக்கும்.

அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு தலா ₹3 கோடி வழங்கப்படும்.   லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடிக்கும் இரு அணிகளுக்கு தலா 58 லட்சம் கிடைக்கும். கடைசி இடத்துக்கு தள்ளப்படும் இரு  அணிகள் தலா ₹39 லட்சத்தை பெறும்.   லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.   கத்துக்குட்டி என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்து வரும் வங்கதேசம் முன்னணி அணிகளுக்கு பல முறை அதிர்ச்சியளித்துள்ளது.



கடந்த  2015 உலக கோப்பை லீக் சுற்றில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியளித்த வங்கதேசம் மீண்டும் அந்த ‘ஹீரோயிசத்தை’  வெளிப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ெதாடரை 2-1 என கைப்பற்றிய  மகிழ்ச்சியில் இங்கிலாந்து களமிறங்கும்.

சொந்த மண் என்பது கூடுதல் பலம். இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


.

மூலக்கதை