ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல்- மோடி சந்திப்பு வர்த்தகம், தீவிரவாத தடுப்பு குறித்து ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் மோடி சந்திப்பு வர்த்தகம், தீவிரவாத தடுப்பு குறித்து ஆலோசனை

பெர்லின்: ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லை இன்று சந்தித்தார். வர்த்தகம்,  தீவிரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசினர். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின் பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.   முதல்கட்டமாக நேற்று ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார்.

அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அந்நாட்டு  பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லை சந்தித்தார்.



 வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருத்துவம்,  போக்குவரத்து போன்றவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது  குறித்து பேசினார்.

இந்தியா-ஜெர்மனி அரசுகளின் ஆலோசனை கூட்டத்தில், நரேந்திர மோடி, ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளை  குறிவைத்து சமீபத்தில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள், பயங்கரவாதத்தை தடுப்பது, இருநாடுகள் இடையேயான முதலீடு, ஐரோப்பிய  கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

முதலீடு தொடர்பாக  இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.    

இக்கூட்டத்தில் ஜெர்மனியின் பிரபல நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு  தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று இரவு  புறப்பட்டு செல்கிறார்.



.

மூலக்கதை