ஈராக்கில் பயங்கரம் கார்குண்டு தாக்குதல் 13 பேர் பரிதாப பலி: 30 பேர் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈராக்கில் பயங்கரம் கார்குண்டு தாக்குதல் 13 பேர் பரிதாப பலி: 30 பேர் படுகாயம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள ஐஸ் கிரீம் பார்லரில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஐஸ் கிரீம் பார்லரில் நேற்று நள்ளிரவு நூற்றுக்கணக்கானோர் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.   இந்நிலையில், அந்த கடையின் வளாகத்தில் நின்றிருந்த கார் ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.

இதனால் அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.   அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்தனர்.

தகவலறிந்து பாதுகாப்பு படையினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர்.

படுகாயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. சம்பவம்  நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது. பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள கரடா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில்தான்  தீவிரவாதிகளால் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்தாண்டு மட்டும் பொதுமக்களில் 300 பேர் பலியாகியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை