மோரா புயல்.. கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை… துறைமுகங்களில் 2ம் எண் கூண்டு ஏற்றம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோரா புயல்.. கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை… துறைமுகங்களில் 2ம் எண் கூண்டு ஏற்றம்

கடலூர்: கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

எண்ணூர், ராமநாதபுரம் பாம்பன், புதுச்சேரி துறைமுகத்திலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வங்க கடலில் 720 கி.மீ. தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கூண்டு ஏற்றப்பட்டது.

மோரா எனப் பெயரிடப்பட்ட புயல், வலுவடைந்து 24 மணி நேரத்தில் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில் புயல் சின்னம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை