தென் ஆப்ரிக்கா 2 ரன்னில் தோல்வி இங்கிலாந்து தொடரை வென்றது

தினகரன்  தினகரன்

சவுத்தாம்ப்டன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 101 ரன் (79 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஹேல்ஸ் 24, ரூட் 39, கேப்டன் மோர்கன் 45, பட்லர் 65*, மொயீன் அலி 33 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 328 ரன் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டி காக் 98 ரன், அம்லா 24, கேப்டன் டி வில்லியர்ஸ் 52, டு பிளெஸ்ஸி 16, பெஹார்டியன் 17 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி இலக்கை எட்டப் போராடிய மில்லர் 71 ரன் (51 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மோரிஸ் 36 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவரில் 7 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், துல்லியமாகப் பந்துவீசிய மார்க் வுட் வெறும் 4 ரன் விட்டுக் கொடுத்து தென் ஆப்ரிக்காவிடம் இருந்து வெற்றியைத் தட்டிப் பறித்தார். பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

மூலக்கதை