விவசாயிகள் உர மானியம் பெறுவதற்கு ஆதார் எண்... கட்டாயம்!ஜூனில் இருந்து அமல்படுத்த வேளாண் துறை திட்டம்

தினமலர்  தினமலர்

பஞ்சுப்பேட்டை;தனியார் உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கும் உரங்களுக்கு, ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு உர மானியம் கிடைக்கும் என, வேளாண் துறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், 149 கூட்டுறவு வோளண் உர விற்பனை நிலையங்கள், 237 சில்லரை உர விற்பனை நிலையங்கள், 42 மொத்த உர விற்பனை நிலையங்கள் என, மொத்தம், 428 உரக்கடைகள் உள்ளன. இந்த உரக்கடைகளில், விவசாயிகள் விதை மற்றும் உரங்களை கொள்முதல் செய்கின்றனர்.கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் உரங்களுக்கு, சங்க ரசீது வழங்கப்படுகிறது.
தனியார் உர வியாபாரிகளில் சிலர் கணினி பில் வழங்குகின்றனர். சிலர், பில் வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு வேளாண் சங்கங்களில், 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் மூலமாக உரங்கள் வழங்கப்பட உள்ளன.விவசாயிகள் வாங்கும் உரங்களுக்கு, மொத்த பணம் செலுத்தாமல், உரங்களுக்கு உரிய மானியம் போக, மீதி தொகை செலுத்தி விவசாயிகள் உரங்களை வாங்கி செல்லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இருந்து, விவசாயிகள்தங்களின் ஆதார் எண்ணை கட்டாயமாக, உர கடைகள் மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் அளித்து, உர மானியம் பெறலாம் என, வேளாண் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு வந்த பெரிய சோதனையில் இருந்து விடுபட்டுஉள்ளதாக, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு தவிர்க்கப்படும்!
காஸ் மானியம் போல், உர மானியமும், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த அரசு ஆலோசனை செய்தது. இதனால், விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படும் என, கேட்டு கொண்டதால், அரசு நேரடி மானியம் திட்டத்தை கைவிட்டுள்ளது. நேரடி மானிய திட்டத்திற்கு பதிலாக, உர மானியங்கள் உர நிறுவனங்களுக்கு விவசாயிகளின், 'ஆதார்' எண் மூலமாக வழங்க உள்ளது. இந்ததிட்டத்தால், உர நிறுவனம் முறைகேடாகமானியம் பெற முடியாது.-வேளாண் துறை அதிகாரிகாஞ்சிபுரம்


ஆதார் எண் இணைப்பின் பயன்கள்விவசாயிகள் ஆதார் எண் பதிவதால் சிறு, குறு விவசாயிகளின் விபரங்கள் தெரிய வரும்ஒரு விவசாயி உரத்திற்குரிய மொத்த விலையை உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்த வேண்டி இருக்காதுஉரம் மானியம் போக, மீதம் இருக்கும் தொகைக்கு மட்டுமே, பில் தொகை செலுத்த வேண்டி இருக்கும்உர மானியம் இன்றி விற்பனை செய்யப்படும் உரங்கள் தடுக்கப்படும்உர மூட்டைகள் விவசாயிகள் பதுக்குவது தடுக்கப்படும்.விவசாயிகளின் ஆதார் எண் பதிவதால் சிறு, குறு விவசாயிகளின் விபரங்கள் தெரிய வரும்


இரு தின பயிற்சி!'பாயின்ட் ஆப் சேல்' கருவி மூலமாக, ஆதார் எண் பதிவேற்றம் செய்வது எப்படி, உர மானியம் எந்த நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் என, தனியார் உரக் கடைகள் மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு இரு தினங்கள் பயிற்சி அளிக்கப் படுகிறது.இதில், பாயின்ட் ஆப் சேல் கருவியும் வழங்கப்பட உள்ளது.

மூலக்கதை