மின்சாரம் திருடினால் 5 ஆண்டுகள் சிறை: உ.பி., முதல்வர் யோகி அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மின்சாரம் திருடினால் 5 ஆண்டுகள் சிறை: உ.பி., முதல்வர் யோகி அதிரடி

ஆக்ரா:  மின்சாரத்தை திருடினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மின் திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது.

டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் போன்றவற்றில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கின்றனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் சொந்தவூர், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் எம்பியாக உள்ள தொகுதி, முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கியிருந்த கோராக்பூர் ஆகிய இடங்களிலும்கூட அதிகளவில் மின்திருட்டு நடைபெற்று வருகிறது.

 

இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் மின்திருட்டு குறைந்தபாடில்லை.

இந்நிலையில், மின் திருட்டை தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மின்சாரம் திருடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது முறை தவறு செய்தது தெரியவந்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மின் திருட்டில் ஈடுபடுவோரின் வீடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை தடை செய்யவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் மின் திருட்டு தடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


.

மூலக்கதை