எங்கே டாஸ்மாக் வைக்கணும் தெரியுமா? அரசுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பலே ஐடியா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்கே டாஸ்மாக் வைக்கணும் தெரியுமா? அரசுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பலே ஐடியா

தஞ்சாவூர்: டாஸ்மாக் மதுபானக் கடைகளை போலீஸ் ஸ்டேஷனில் வைத்தால்தான் பாதுகாப்பாக இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கும்பகோணத்தில் என்னுடைய கொடும்பாவியை எரித்தனர். பொதுவாக கொடும்பாவி எரித்தால் சம்மந்தபட்டவர்களின் ஆயுள்காலம் நீடிக்கும் என்பார்கள் எனவே என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது. மாட்டிறைச்சி இந்தியா முழுவதும் உள்ள பொதுவான ஒரு உணவு. கொடுங்கோல் ஆட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியில் கூட உணவு முறையில் தலையிடுவதில்லை. ஆனால் மோடி அரசு செய்துள்ளது. இது போன்று தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பாலில் கலப்படம் என்பது ஜெயலலிதா ஆட்சியிலேயே விஸ்வரூபம் எடுத்தது. முதலில் ஆவின் பால் தரம் நிறைந்ததா? மக்கள் உயிருக்கு பாதுகாப்பானதா? என்று தகுந்த நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து அதற்கான அறிக்கை விடவேண்டும். தனியார் பால் நிறுவனங்களில் பணம் வாங்குவதற்காக தான் அமைச்சர் தனியார் பாலில் கலப்படம் என்று அறிவித்தார்.

அ.தி.மு.க.அரசின் 100 நாள் சாதனை என்பது ஏன் 6 ஆண்டு சாதனை கூட பூஜ்ஜூயம் தான். இதை நினைத்தால் வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க. கட்சியினர் மோடி காலில் விழுவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. பாஜகவின் பினாமி அரசாக அ.தி.மு.க. மாறுகிறது.

டாஸ்மாக் கடையை முழுமையாக எடுத்துவிட வேண்டும். இல்லை அதற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் காவல் நிலையத்திற்குள் டாஸ்மாக்கை நடத்த வேண்டும். அப்போது தான் அது பாதுகாப்பாக இருக்கும்.

கருணாநிதியின் வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அவர் கால் பதித்த எல்லாதுறையிலும் சாதனை மிக்கவராக உள்ளார். எனவே அவருக்கு விழா கொண்டாடுவது சால சிறந்தது." என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை