சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்.. முதலிடத்தில் கேரளா... டெல்லியை முந்திய சென்னை மண்டலம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்.. முதலிடத்தில் கேரளா... டெல்லியை முந்திய சென்னை மண்டலம்!

சென்னை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது. இதில் கேரள மண்டலம் முதலிடத்தையும், அதனைத்தொடர்ந்து சென்னை இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளது. தலைநகர் டெல்லி 88.37 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதில் 10673 பள்ளிகளைச் சேர்ந்த 11 லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்றன. மொத்தம் 3504 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

இதற்கான முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியானது. இதில் 82.02 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 1.03 சதவீதம் குறைவாகும். இதில் 95.62 சதவீதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை 92.60 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும் டெல்லி 88.37 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்விலும் மாணவிகளே அதிகளவு தேர்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணிவிகள் 9.5 சதவீதம் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

86.69 சதவீத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை செட்டிநாடு வித்யாஷரம் பள்ளி மாணவர் சுந்தர் ராமன், 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

நொய்டா மாணவர் ரக்ஷா கோபால் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சண்டிகர் பூமி சவந்த் என்ற மாணவர் 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். ஆதித்யா ஜெயின் , மன்னாத் லூத்ரா ஆகிய 2 பேர் தலா 496 மதிப்பெண்கள் மூன்றாமிடத்தை பிடித்தனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை