ரூ.500 கோடி­யில் புதிய ஆலை அசஹி இந்­தியா அமைக்­கிறது

தினமலர்  தினமலர்
ரூ.500 கோடி­யில் புதிய ஆலை அசஹி இந்­தியா அமைக்­கிறது

புது­டில்லி : அசஹி இந்­தியா கிளாஸ் நிறு­வ­னம், குஜ­ராத்­தில் புதிய ஆலை ஒன்றை அமைக்க உள்­ளது. குஜ­ராத்­தில் உள்ள ஹன்­சால்­பு­ரில், ஜப்­பானை சேர்ந்த, சுசூகி நிறு­வ­னம் அமைத்­துள்ள, புதிய கார் தொழிற்­சா­லைக்கு தேவைப்­படும் வாகன கண்­ணா­டி­களை தயா­ரிக்­கும் நோக்­கத்­து­டன் இந்த ஆலையை அமைக்­கிறது, அசஹி இந்­தியா நிறு­வ­னம். இந்த ஆலைக்­காக, 500 கோடி ரூபாயை முத­லீடு செய்­கிறது இந்­நி­று­வ­னம். இந்த முத­லீடு இரு கட்­டங்­க­ளாக செய்­யப்­பட உள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, சஞ்­சய் லாப்ரோ கூறி­ய­தா­வது:முதல்­கட்­ட­மாக, இந்த ஆலை ஆண்­டுக்கு, 10 லட்­சம் லேமி­னேட்­டட் கண்­ணா­டி­க­ளை­யும், 1 லட்­சத்து 20 ஆயி­ரம் டெம்­பர்டு கண்­ணா­டி­க­ளை­யும் தயா­ரிக்­கும் திறன் கொண்­ட­தாக அமைக்­கப்­படும்.அடுத்த கட்­ட­மாக, இந்­தியா முழுக்க இருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக கண்­ணா­டி­கள் சப்ளை செய்­யப்­படும். மேலும், மதிப்­புக் கூட்­டப்­பட்ட கண்­ணாடி வகை­களும் தயா­ரிக்­கப்­படும்.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

மூலக்கதை