கட்டுமான சாதனங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி காணும்

தினமலர்  தினமலர்
கட்டுமான சாதனங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி காணும்

சண்டிகர் : ‘ரயில்வே மற்­றும் நீர்ப்­பா­ச­னம் ஆகிய இரு துறை­களும், கட்­டு­மான சாத­னங்­கள் துறை­யின் வளர்ச்­சிக்கு, பெரு­ம­ள­வில் உத­வும்’ என தெரி­வித்­துள்­ளது, ஜே.சி.பி., இந்­தியா நிறு­வ­னம்.ஜே.சி.பி., இந்­தியா நிறு­வ­னம், கட்­டு­மா­னம், மண் அகற்­றல் உள்­ளிட்ட வேலை­க­ளுக்கு பயன்­படும் சாத­னங்­களை தயா­ரித்து வரு­கிறது. கட்­டு­மான சாத­னங்­கள் துறை குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, விபின் சோந்தி கூறி­ய­தா­வது:இந்த ஆண்­டில் கட்­டு­மான சாத­னங்­களின் துறை வளர்ச்சி, 10 முதல் 15 சத­வீ­தம் அள­வுக்கு இருக்­கும் என எதிர்­பார்க்­கி­றோம். ஆனா­லும், இது போதாது என்­று­ தான் கூற வேண்­டும்.ரயில்வே மற்­றும் நீர்ப்­பா­சன துறை­கள் அதன் திட்­டங்­களை அமல்­ப­டுத்த முனைந்­தால், அது இந்த துறை­யின் வளர்ச்­சிக்கு ஊக்­கம் தரு­வ­தாக இருக்­கும். தற்­போது, சாலை­கள் மற்­றும் நெடுஞ்­சாலை துறை­கள் மூல­மா­கத் ­தான் கட்­டு­மான சாத­னங்­கள் துறை வளர்ச்சி கண்டு வரு­கிறது.ஜன­வரி முதல் ஏப்­ரல் வரை­யி­லான கால­கட்­டத்­தில், இத்­துறை, 10 முதல் 15 சத­வீத வளர்ச்சி கண்­டுள்­ளது. 2016ம் ஆண்­டில், இத்­துறை 45 சத­வீத வளர்ச்­சியை எட்­டி­யது. இதற்கு முடங்­கிப் போன கொள்­கை­கள், நிலத்தை கைய­கப்­ப­டுத்­து­த­லில் இருந்த சிக்­கல்­கள் ஆகி­ய­வற்றை கார­ண­மா­கச் சொல்­ல­லாம்.எனி­னும், 2020ம் ஆண்­டில் இத்­து­றை­யா­னது, சுமார், 39 ஆயிரம் கோடி ரூபாய் அதா­வது, 6 பில்­லி­யன் டாலர் கொண்­ட­தாக இருக்­கும்.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

மூலக்கதை