ஐ.டி., துறையில் ஆட்குறைப்பால் குடியிருப்பு விற்பனை பாதிப்பு

தினமலர்  தினமலர்
ஐ.டி., துறையில் ஆட்குறைப்பால் குடியிருப்பு விற்பனை பாதிப்பு

மும்பை : ஐ.டி., எனப்­படும் தக­வல் தொழில்­நுட்ப துறை­யில், இன்­போ­சிஸ், விப்ரோ, காக்­னி­ஸன்ட் போன்ற நிறு­வ­னங்­கள், ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­தால், குடி­யி­ருப்­பு­களின் விற்­பனை பாதிக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இது குறித்து, ஜோன்ஸ் லாங் லாசல் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:இந்­தி­யா­வில், ஐ.டி., மற்­றும் பி.பி.ஓ., துறை­களில், 16 ஆயி­ரம் நிறு­வ­னங்­கள் உள்ளன. அவற்­றில், 40 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர் பணி­யாற்­று­கின்­ற­னர். பெங்­க­ளூரு மற்­றும் புனே நக­ரங்­களில் தான், ஐ.டி., நிறு­வ­னங்­கள் அதி­கம் உள்ளன.எனி­னும், ஐ.டி., துறை­யின் ஆட்­கு­றைப்­பில், ஐத­ரா­பாத், ­மும்பை, நொய்டா போன்ற நக­ரங்­க­ளி­லும், குடி­யி­ருப்பு ரியல் எஸ்­டேட் துறை பாதிக்­கப்­படும் வாய்ப்பு உள்­ளது. ஐ.டி., துறை­யில், 30 – 40 வய­துள்­ளோர் மற்­றும் அதற்கு மேற்­பட்­டோர், ஆண்­டுக்கு, 20 – 60 லட்­சம் வரு­வாய் ஈட்­டு­கின்­ற­னர்.பெங்­க­ளூ­ரில், இப்­பி­ரி­வில், 2 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர் உள்­ள­னர். இவர்­கள், நடுத்­த­ர­மான பிரீ­மி­யம் குடி­யி­ருப்­பு­களை தேர்வு செய்­வ­தில் ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர்.இவர்­கள், வேலை இழப்­பிற்கு ஆளா­கும்­பட்­சத்­தில், நடுத்­தர பிரீ­மி­யம் குடி­யி­ருப்பு துறை­யின் வளர்ச்சி பாதிக்­கப்­படும்.சில ஆண்­டு­க­ளாக, ஆடம்­பர வீடு­களின் விற்­பனை பாதிக்­கப்­பட்ட போதி­லும், முன்­னணி நிறு­வ­னங்­களின் நடுத்­தர பிரீ­மி­யம் குடி­யி­ருப்பு திட்­டங்­க­ளுக்கு வர­வேற்பு காணப்­பட்­டது.ஐ.டி., துறை­யின் ஆட்­கு­றைப்­பால், இனி, இத்­த­கைய குடி­யி­ருப்­பு­க­ளுக்­கான தேவை குறை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதே சம­யம், அர­சின் ஆத­ரவு, குறைந்த வட்டி போன்­ற­வற்­றால், நடுத்­தர குடி­யி­ருப்பு திட்­டங்­க­ளுக்கு, தொடர்ந்து வர­வேற்பு இருந்து வரு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை