சலசர் டெக்னோ இன்ஜினியரிங் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி

தினமலர்  தினமலர்
சலசர் டெக்னோ இன்ஜினியரிங் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி

புதுடில்லி : ராஜஸ்­தா­னைச் சேர்ந்த, சல­சர் டெக்னோ இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம், தொலைத்­தொ­டர்பு கோபு­ரங்­க­ளுக்­கான கட்­ட­மைப்­பு­கள், பிரத்­யேக உருக்கு வடி­வ­மைப்பு திட்­டங்­கள், மின் வினி­யோக கோபு­ரங்­கள், துணை மின் நிலை­யங்­கள் மற்­றும் சூரிய மின் உற்­பத்­திக்­கான அடித்­த­ளங்­கள் அமைப்­பது உள்­ளிட்ட வர்த்­த­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது.இந்­நி­று­வ­னம், அதன் நடை­முறை மூல­தன தேவை­க­ளுக்­கும், நிர்­வாக செயல்­பா­டு­க­ளுக்­கும் தேவை­யான நிதியை திரட்­டிக் கொள்ள, பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.இந்­நி­று­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ அனு­மதி அளித்­துள்­ளது.இதை­ய­டுத்து, 33 லட்­சம் பங்­கு­களை வெளி­யிட்டு, 36 கோடி ரூபாய் திரட்­டிக் கொள்ள, இந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது. பங்கு வெளி­யீட்­டிற்­கான தேதி விரை­வில் அறி­விக்­கப்­படும் என, தெரி­கிறது.இப்­பங்கு வெளி­யீட்டை, ‘சாரதி கேப்­பி­டல் அட்­வை­சர்ஸ்’ நிறு­வ­னம், நிர்­வ­கிக்க உள்­ளது.பங்கு வெளி­யீட்­டிற்கு பின், நிறு­வ­னத்­தின் பங்­கு­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும்.

மூலக்கதை