சவால்களை மீறி வருவாய் டெக் மகிந்திரா சாதனை

தினமலர்  தினமலர்
சவால்களை மீறி வருவாய் டெக் மகிந்திரா சாதனை

புதுடில்லி : தக­வல் தொழில்­நுட்ப துறை­யில் முன்­ன­ணி­யில் உள்ள, டெக் மகிந்­திரா, மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 558 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 854.80 கோடி ரூபா­யாக உயர்ந்­தி­ருந்­தது.கடந்த முழு நிதி­யாண்­டில், டெக் மகிந்­தி­ரா­வின் நிகர லாபம், 2,812.90 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டில், 2,992.90 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து இருந்­தது. இதே கால ஒப்­பீட்­டில், இந்­நி­று­வ­னத்­தின் வரு­வாய், 9.9 சத­வீ­தம் உயர்ந்து, 26,494.20 கோடி ரூபா­யில் இருந்து, 29,140.80 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இது குறித்து, டெக் மகிந்­தி­ரா­வின் துணை தலை­வர், வினீத் நய்­யார் கூறி­ய­தா­வது:அமெ­ரிக்க அதி­பர், டிரம்­பின் அறி­விப்­பு­க­ளுக்கு பின், தக­வல் தொடர்பு துறை உயிர் பிழைக்­குமா என்ற கேள்வி எழுப்­பப்­ப­டு­கிறது. உண்­மை­ தான்; அவ­ரு­டைய அறி­விப்­பு­கள், பல சவால்­களை எங்­கள் முன்னே கொண்டு வந்து நிறுத்­தி­யது. ஆனால், இது அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து மட்­டு­மல்ல; உல­கெங்­கி­லும் இருந்து இத்­த­கைய தடை­கள் அதி­க­ரித்து வரு­கின்றன.சில வெளிப்­ப­டை­யா­க­வும், சில மறை­மு­க­மா­க­வும் உள்­நாட்­டில் வேலை வாய்ப்­பு­களை அதி­க­ரிக்க உரு­வாக்­கப்­ப­டு­கின்றன. ஆனால், நாங்­கள் உயி­ரோடு இருக்­கி­றோம்; தடை­களை தகர்த்து எறி­ய­வும் செய்­தி­ருக்­கி­றோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை