ஐ.டி.சி., சந்தை மதிப்பு ரூ.10,872 கோடி அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஐ.டி.சி., சந்தை மதிப்பு ரூ.10,872 கோடி அதிகரிப்பு

புதுடில்லி : ஐ.டி.சி., நிறு­வ­னம், சந்தை மதிப்­பில், 10 ஆயி­ரத்து, 872 கோடி ரூபாயை அதி­க­ரித்­துக் கொண்­டுஉள்­ளது.உள்­நாட்­டில், ஐ.டி.சி., நிறு­வ­னம், ஓட்­டல், நுகர்­பொ­ருட்­கள் உள்­ளிட்ட பல துறை­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடிந்த காலாண்­டில், 2,669.47 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.இது, அதற்கு முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 2,380.68 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே கால ஒப்­பீட்­டில், இந்­நி­று­வ­னத்­தின் நிகர விற்­பனை, 6.15 சத­வீ­தம் உயர்ந்து, 14,138.78 கோடி ரூபா­யில் இருந்து, 15,008.82 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த காலாண்­டில், ஐ.டி.சி., அதன் சந்தை மதிப்பை, 10,872 கோடி ரூபாய் அள­வுக்கு உயர்த்­தி­யுள்­ளது.இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னத்­தின் மொத்த சந்தை மதிப்பு, 3,74,928.98 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இது­கு­றித்து, இந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘எங்­கள் நிறு­வ­னத்­தின், வேளாண் பொருட்­கள், பாக்­கெட்­டில் அடைக்­கப்­பட்ட உணவு பொருட்­கள் மற்­றும் தனி­ந­பர் பயன்­ப­டுத்­தும் பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் விற்­பனை, கடந்த காலாண்­டில் அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், ஒட்­டு­மொத்த அள­வில் சிறப்­பான வளர்ச்சி கிடைத்­துள்­ளது’ என்­றார்.

மூலக்கதை