"வெற்றி'யின் பசுமைப்பணிக்கு... பாராட்டு! வருவாய் கமிஷனர் புகழாரம்

தினமலர்  தினமலர்
வெற்றியின் பசுமைப்பணிக்கு... பாராட்டு! வருவாய் கமிஷனர் புகழாரம்

திருப்பூர் : மரங்களை மறுநடவு செய்து, நினைவு சின்னங்களாக மாற்றியுள்ள மாவட்ட நிர்வாகம், இதற்கு பாடுபட்ட "வெற்றி' அமைப்பினரையும், வருவாய் நிர்வாக கமிஷனர் பாராட்டினார்.
திருப்பூர் மாவட்டத்தில், வேளாண் உற்பத்தியை பெருக்குவது தொடர்பாக, வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வறட்சியை சமாளிக்க ஏதுவாக, "அசோலா' சாகுபடி செய்தது, "ஹைட்ரோபோனிக்' தொழில்நுட்பத்தில் பசுந்தீவனம் உற்பத்தி செய்தது உள்ளிட்ட பணிகளையும், அவர் ஆய்வு செய்தார்.மண்ணரை குளத்தில்,"கிராவல்' மண் எடுக்கும் பணிகளை பார்வையிட்ட அவர், ""விதிமுறைகளுக்கு உட்பட்டு, "கிராவல்' மண் எடுக்க வேண்டும். வருவாய்த்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,'' என்று அறிவுறுத்தினார்.முன்னதாக, என்.எச்., ரோடு விரிவாக்க பணிக்காக, வெட்டப்பட இருந்த மரங்களை, மறுநடவு செய்தது குறித்து, கேட்டறிந்தார். "வெற்றி' அமைப்பின், "வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினரின் முயற்சியால், 3 மரங்கள் மறுநடவு செய்தது குறித்து, விளக்கப்பட்டது.இது குறித்த, டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி, போட்டோவுடன் விளக்கினார். பசுமை பணிக்கு வித்திட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் "வெற்றி' அமைப்பினரையும், வருவாய் நிர்வாக கமிஷனர் வெகுவாக பாராட்டினார். மரம் வளர்ப்பையும், மரங்கள் மறுநடவு செய்வதையும், வருவாய்த்துறையினர் ஊக்குவிக்க வேண்டும் என்று, அறிவுறுத்தினார்.கலெக்டர் ஜெயந்தி, வேளாண்துறை இணை இயக்குனர் (பொ) தமிழ்செல்வன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மூலக்கதை