கனமழையால் சோளப்பயிர்...சேதம்:கவலையில் விவசாயிகள்

தினமலர்  தினமலர்

போடி,:அறுவடை சீசன்துவங்க உள்ள நிலையில் போடியில் பெய்த கனமழை காரணமாக, சோள தட்டை கீழே சரிந்து 50 ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ள ர்.போடி, மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், மேலச்சொக்கநாதபுரம், விசுவாசபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சோளம் பயிரிடப்பட்டுள்ளனர். மே, ஜூன், ஜூலை இதற்கான சீசனாகும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவம் தவறி பெய்த மழையால் சோளம் விளைச்சல் அதிகரித்திருந்தது. ஒரு குவிண்டால்(100 கிலோ) ரூபாய் ஆயிரத்தி 200 முதல் ஆயிரத்தி 300 வரை விலை போனது. கடந்த ஆண்டு சோளம் விளைச்சல் மட்டுமின்றி குவிண்டாலுக்கு 250 ரூபாய் வரை விலையும் அதிகரித்திருந்தது.அடுத்தமாதம் சோளம் அறுவடை துவங்க உள்ள நிலையில், போடி சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கன மழைகாரணமாக சோளம் அடிப்பாக தட்டை ஒடிந்து, கீழே சரிந்தது. இதனால் 50 ஏக்கருக்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதனை கால்நடை தீவனமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.

மூலக்கதை