வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மரக்கரி: விலை வீழ்ச்சியால் பாதிப்பு

தினமலர்  தினமலர்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மரக்கரி: விலை வீழ்ச்சியால் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மரக்கரி தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் மரக்கரி தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டமாகும். இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால், மக்கள் வேறுவழியின்றி சீமைக்கருவேல மரங்களை அழித்து, அதன் விறகிலிருந்து மரக்கரி உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

10 ஆயிரம் குடும்பம்

ராமநாதபுரம், திருப்புல்லாணி, முதுகுளத்துார், சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கரி உற்பத்தி செய்யும் பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தினமும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி எடுத்து, கரிமூட்டம் போடுகின்றனர். பின்னர் மரக்கரிகளை மூடைகளில் அடைத்து மானாமதுரை, கொல்கத்தாவுக்கும், துாத்துக்குடி துறைமுகம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்புகின்றனர். இதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், இத்தொழிலுக்கு தற்போது கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.ஏ.போஸ், கோவிலாங்குளம்: நாங்கள் 30 ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்களை வெட்டி, அதன் துார்களை எடுத்து கரிமூட்டம் போட்டு பிழைத்து வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது.

சிவக்குமார், சிக்கல்: பஞ்சம் ஏற்பட்டாலும், இந்த மாவட்டத்தை விட்டு செல்லாமல் இங்கேயே வாழ்ந்து வருகிறோம். தற்போது மரக்கரி ஒரு மூடை 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கட்டுப்படியாகவில்லை.--

மூலக்கதை