தனியார் பாலில் ரசாயன கலப்படம் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தனியார் பாலில் ரசாயன கலப்படம் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மீனம்பாக்கம்: தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக கூறப்படும் விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், இன்று காலை 8. 50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில்தான் மாடுகள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாேர?மத்திய அரசின் இந்த அறிவிப்பை நான் மட்டுமல்ல, எல்லா கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

பாஜ ஆட்சியில் சாதனை என்று எதுவும் சொல்ல முடியவில்லை. அதையெல்லாம் மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.



இது நிச்சயமாக சிறுபான்மை பிரிவை சார்ந்துள்ளவர்களையும் விவசாய மக்களையும் பெரிதும் பாதிக்கும். மதவாத சக்தியை, உணர்வை புகுத்துவதற்கு பல திட்டங்களை அவர்கள் தீட்டி செயல்படுத்துகிறார்கள்.

அதில் ஒரு திட்டம்தான், இந்த அறிவிப்பு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதை உடனே திரும்ப ெபற ேவண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது. தனியார் பாலில் ரசாயனம் கலந்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதே?இதே அதிமுக ஆட்சியில், ஏற்கனவே ஆவின் பாலில் கலப்படம் செய்து மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

 அதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடந்தது. அது என்ன ஆனது என்று தெரியவில்லை.

ஆனால், பால்வளத்துறை அமைச்சரே, தனியார் பாலில் கலப்படம், ரசாயனம் கலக்கப்படுகிறது என்றெல்லாம் சொல்கிறார். ரசாயன கலப்படம் இவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும்.

ஏன், இதுவரை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இதுபற்றி, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை வைத்து நிச்சயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



.

மூலக்கதை