ரியல் எஸ்டேட் துறையில் எழுச்சிக்கான அறிகுறிகள்

தினமலர்  தினமலர்
ரியல் எஸ்டேட் துறையில் எழுச்சிக்கான அறிகுறிகள்

புதுடில்லி : நைட் பிராங்க் இந்­தியா – ‘பிக்கி’ அமைப்பு இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: கடந்த ஆண்டு நவம்­ப­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட, பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ரியல் எஸ்­டேட் துறையை கலங்­க­டித்து விட்­டது.

அப்­போது, ரியல் எஸ்­டேட் துறை­யி­னர், கட்­டு­மான துறை­யி­னர், வங்கி மற்­றும் நிதி நிறு­வன அதி­கா­ரி­கள் உள்­ளிட்­டோ­ரி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. அவர்­கள் தெரி­வித்த கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யில் தயா­ரிக்­கப்­பட்ட, 2016 அக்., – டிசம்­பர் வரை­யி­லான, ரியல் எஸ்­டேட் நில­வ­ரக் குறி­யீடு, 41 புள்­ளி­க­ளாக, மூன்­றாண்­டு­களில் இல்­லாத அள­விற்கு சரி­வ­டைந்­தது.

இந்­தாண்டு துவக்­கத்­தில் இருந்து, பணப்­பு­ழக்­கம் மெல்ல சீர­டைந்து இயல்பு நிலை துவங்­கி­யதை அடுத்து, ரியல் எஸ்­டேட் நில­வ­ரக் குறி­யீடு, தற்­போது, 53 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது. எனி­னும், ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­ முறை சட்­டம், பினாமி சொத்து தடுப்பு சட்­டம், சரக்கு மற்­றும் சேவை வரி போன்ற, அரசு கொள்­கை­களின் தாக்­கத்தை அறிய, ஆறு மாதங்­கள் ஆகும் என, தெரி­கிறது. அது­வரை பொறுத்­தி­ருக்­க­லாம் என, ரியல் எஸ்­டேட் துறை­யி­னர் கரு­து­கின்­ற­னர். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

மூலக்கதை