ஐ.டி., நிறுவனங்களில் ஆட்குறைப்பு: ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி கவலை

தினமலர்  தினமலர்
ஐ.டி., நிறுவனங்களில் ஆட்குறைப்பு: ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி கவலை

பெங்களூரு : ‘‘சமீ­ப­கா­ல­மாக, ஐ.டி., நிறு­வ­னங்­கள், செலவை குறைக்­கும் நோக்­கில், ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­வது கவலை அளிக்­கிறது,’’ என, ‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னர் நாரா­ய­ண­மூர்த்தி தெரி­வித்து உள்­ளார்.

இன்­போ­சிஸ் நிறு­வ­னம், மத்­திய மற்­றும் மூத்த நிலை பணி­களில், நுாற்றுக்­க­ணக்­கில் ஆட்­கு­றைப்பு செய்ய உள்­ள­தாக, சமீ­பத்­தில் தக­வல் வெளி­யா­னது. இது, இரு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை, பணி­யா­ளர்­களின் பணி தகு­தியை மதிப்­பிட்டு மேற்­கொள்­ளும், வழக்­க­மான நடை­முறை தான் என, இன்­போ­சிஸ் தெரி­வித்து உள்­ளது.

காக்­னி­ஸன்ட் நிறு­வ­னம், அதன் இயக்­கு­னர்­கள், மூத்த துணைத் தலை­வர்­கள், இணை துணைத் தலை­வர்­கள் ஆகி­யோ­ருக்கு, 6 – 9 மாத ஊதி­யத்­து­டன், தன் விருப்ப பிரிவு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

விப்ரோ நிறு­வ­னம், 600 பேருக்கு பணி­யில் இருந்து விடை கொடுத்­துள்­ளது. எனி­னும், இந்த எண்­ணிக்கை, இரண்­டா­யி­ரத்தை தாண்­டும் என, கூறப்­ப­டு­கிறது. ஐ.டி., நிறு­வ­னங்­கள் அவற்­றின் செலவை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்ளன. மேலும், செயற்கை நுண்­ண­றிவு சாப்ட்­வேர்­கள் மூலம், பணி­களை தன்­னிச்­சை­யாக செய்­யும் நடை­மு­றை­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கின்றன. இத­னால், இவ்­வகை பணி­களில் உள்­ளோர் வேலை­யி­ழப்­பிற்கு ஆளா­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், ஐ.டி., நிறு­வ­னங்­களின் ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­கள், தனக்கு மிகுந்த கவலை அளிப்­ப­தாக, இன்­போ­சிஸ் நிறு­வ­ன­ரும், அதன் கவு­ரவ தலை­வ­ரு­மான நாரா­ய­ண­மூர்த்தி, ‘டுவிட்­டர்’ செய்­தி­யில் குறிப்­பிட்டு உள்­ளார். ஆனால், இன்­போ­சிஸ் எத்­தனை ஊழி­யர்­க­ளுக்கு பணி விடை­வோலை வழங்க உள்­ளது குறித்து, அவர் எது­வும் குறிப்­பி­ட­வில்லை.

மூலக்கதை