லித்தியம் அயன் பேட்டரிகள்; சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா

தினமலர்  தினமலர்
லித்தியம் அயன் பேட்டரிகள்; சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா

புதுடில்லி : மின் வாக­னங்­க­ளுக்கு தேவைப்­படும், லித்­தி­யம் அயன் பேட்­ட­ரி­க­ளுக்­கான இந்­திய சந்­தை­யில், சீனா நுழைய திட்­ட­மிட்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், உள்­நாட்­டில், இத்­த­கைய பேட்­ட­ரி­களை தயா­ரிப்­ப­வர்­க­ளுக்கு சலு­கை­கள் அளிக்க அரசு திட்­ட­மிட்டு உள்­ளது.

இது குறித்து, மத்­திய கன­ரக தொழில் துறை அமைச்­சர் ஆனந்த் கீதே கூறி­ய­தா­வது: உல­கில், இன்று சீனா மட்­டுமே, லித்­தி­யம் அயன் பேட்­ட­ரி­களை தயா­ரித்து வரு­கிறது. இந்­தி­யா­வில், மின்­சார கார்­களை ஊக்­கு­வித்­தால், அது அவர்­க­ளுக்கு மகிழ்ச்சி தரு­வ­தாக இருக்­கும். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடித்­த­தாக இருக்­காது. உள்­நாட்­டில் பேட்­டரி தயா­ரிப்­ப­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்றன.

இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி மையம் தயா­ரித்­துள்ள பேட்­ட­ரியை, ரீமா­டல் செய்­யும் முயற்சி எடுக்­கப்­பட்டு வரு­கிறது. அதன் மூலம், அத்­த­கைய பேட்­ட­ரி­களை வாக­னங்­களில் எளி­தாக பயன்­ப­டுத்த முடி­யும். மேலும், 100 கோடி ரூபாய் முத­லீட்­டில், பாரத் ஹெவி எலக்ட்­ரிக்­கல்ஸ் நிறு­வ­னத்­தில், இத்­த­கைய பேட்­ட­ரி­க­ளுக்­கான தயா­ரிப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்த இருக்­கி­றோம்.

மாருதி சுசூகி நிறு­வ­ன­மும், லித்­தி­யம் அயன் பேட்­ட­ரி­கள் தயா­ரிப்­புக்­காக, 2 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய விரும்­பு­கிறது. உள்­நாட்­டில் கார் தயா­ரிப்­பா­ளர்­கள், லித்­தி­யம் அயன் பேட்­ட­ரி­களை தயா­ரிக்க முன்­வந்­தால், அவர்­க­ளுக்கு சலு­கை­கள் வழங்­க­வும் அரசு தயா­ராக இருக்­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை