வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா.மனோகர் பிறந்த நாள்: கோயில்களில் சிறப்பு பூஜை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா.மனோகர் பிறந்த நாள்: கோயில்களில் சிறப்பு பூஜை

சென்னை: வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா. மனோகர் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை காலை 9 மணி அளவில் சென்னை தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் விசேஷ  பூஜையும், அபிஷேகமும், பிரசாதமும் வழங்கப்படுகிறது.

ராஜாஜி சாலையில் உள்ள காலை 11 மணிக்கு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பயிலரங்கத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

மதியம் விருந்து அளிக்கப்படுகிறது.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் மோகன், செய்தி தொடர்பாளர் வெங்கடேசன், ராயபுரம் தொகுதி சர்க்கிள் தலைவர்கள் ரூப்சந்தர், கிருஷ்ணராஜ், ஆர். கே. நகர் தொகுதி சர்க்கிள் தலைவர்கள் ஜெயராமன், ஜிம் ஜே. பாபு, துறைமுகம் தொகுதி சர்க்கிள் தலைவர்கள் ஆர். ஜெ. சந்திரசேகர், கருப்பையா, பெரம்பூர் தொகுதி சர்க்கிள் தலைவர்கள் தங்கேஸ்வரன், பெட்ரோல் பழனி, திருவிக. நகர் தொகுதி சர்க்கிள் தலைவர்கள் பெரம்பூர் பாலு, உமாபதி, வடசென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தனசேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

.

மூலக்கதை