சாக்லெட் சாப்பிடலாமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாக்லெட் சாப்பிடலாமா?

ஐரோப்பிய நாடுகளில் 88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதயம் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதயத்தில் செயல்பாடு நிறுத்தம், பக்க வாதம், நினைவாற்றல் குறைவு மற்றும் மனநலம் பாதித்து பைத்திய நிலைக்கு சென்றடைதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து டென்மார்க்கில் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. 1993 முதல் 1997-ம் ஆண்டுகளில் 55 ஆயிரம் பேரிடம் அவர்களது உடல் நலம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அவர்களிடம் உணவு முறைகள், அன்றாட வாழ்க்கை முறை உள்ளிட்ட 192 தகவல்கள் பெறப்பட்டது. குறிப்பாக உணவு வகைகள் மற்றும் சாக்லெட் உபயோகிப்பது குறித்து கேட்கப்பட்டது.

மேலும் ஆய்வு மேற்கொண்டவர்களின் உடல் நிலை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வந்தது.

அவர்களில் 3,346 பேர் ரத்தக் குழாய் உதறல் நோயினால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது. இவர்கள் மாதத்துக்கு ஒருதுண்டு சாக்லெட் மட்டும் சாப்பிட்டு வந்தனர்.

அதே நேரத்தில் வாரத்துக்கு 2 முதல் 6 சாக்லெட் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தக் குழாய் உதறல் நோய் பாதிப்பு குறைவாக இருந்தது. இதன் மூலம் அதிக சாக்லெட் சாப்பிடுபவர்களுக்கு அதிக கலோரி ஏற்பட்டு இதய தசைகள் மற்றும் ரத்த குழாய் தசைகளை வலுப்படுத்துகிறது.



ரத்தக் குழாய் உதறல் நோயினால் தான் இதய துடிப்பு நிற்பது, பக்கவாதம் மனநிலை பாதிப்பு, பைத்தியம் பிடித்தல் போன்றவை உருவாகிறது. எனவே அதிக அளவு சாக்லெட் சாப்பிடுவதால் மேற்கண்ட நோய்களில் இருந்து தப்பிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே சாக்லெட் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை