பிரேசிலில் சுரங்கத்தின் வழியாக 91 கைதிகள் தப்பினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரேசிலில் சுரங்கத்தின் வழியாக 91 கைதிகள் தப்பினர்

சவோ பவுலோ: பிரேசில் நாட்டில் உள்ள சிறையில், சுரங்கம் அமைத்து 91 கைதிகள் தப்பினர். தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பிரேசிலின் பர்மனமிரின் பகுதியில் உள்ள சிறையில் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் இருந்தவர்களில் 91 பேரை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் ஆய்வு செய்தபோது, அங்கு சுரங்கம் தோண்டப்பட்டிருந்தது. சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தோண்டப்பட்ட சுரங்கத்தின் வழியே கைதிகள் தப்பியது தெரியவந்தது.

தப்பியோடிய கைதிகளில் 9 பேர் பிடிபட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



சினிமாவில் வருவதுபோல் சுரங்கம் அமைத்து கைதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பிடிபட்டவர்கள் அதிகளவில் சிறையில் உள்ளனர்.

சிறையில் போதிய இடம் இல்லை. 389 பேர் அடைக்கப்பட வேண்டிய இடத்தில் 598 கைதிகள் இருந்தனர்.

இதனால் சிறையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 56 பேர் தப்பினர்.

அதிகளவில் கைதிகள் உள்ள நாடுகளில் பிரேசில் 4ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை