அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா: கார்ப்பரேட் நிறுவனங்கள் கணிப்பு

தினமலர்  தினமலர்
அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா: கார்ப்பரேட் நிறுவனங்கள் கணிப்பு

மும்பை : ‘இந்­தியா, வள­ரும் நாடு­களின் பட்­டி­ய­லில் இருந்து, அடுத்த, 15 ஆண்­டு­க­ளுக்­குள், வளர்ந்த நாடு­களின் வரி­சைக்கு முன்­னே­றும்’ என, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் கருத்து தெரி­வித்து உள்ளன.

ரியல் எஸ்­டேட் ஆலோ­சனை நிறு­வ­ன­மான, சி.பி.ஆர்.இ.,இந்­தியா, உள்­நாட்­டைச் சேர்ந்த, 100 முன்­னணி கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில், நாட்­டின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்­கொண்­டது. அதில் பங்­கேற்ற, 500க்கும் அதி­க­மான உய­ர­தி­கா­ரி­கள் தெரி­வித்த கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யில், ஆய்­வ­றிக்கை வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: உல­கில், மிக வேக­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை கொண்ட நாடாக, இந்­தியா விளங்­கு­கிறது. மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்­ளது. உல­கில், அன்­னிய நேரடி முத­லீட்­டுக்கு உகந்த, ‘டாப் – 5’ நாடு­களில், இந்­தியா இடம் பெற்­றுள்­ளது. வரும், 2020ல், அதி­க­ள­வில் இளை­ஞர்­கள் உள்ள நாடா­க­வும், இந்­தியா உரு­வெ­டுக்­கும். ஒரு நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், முக்­கிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வை­யாக, அடிப்­படை கட்­ட­மைப்பு தொழில், ரியல் எஸ்­டேட், கட்­டு­மா­னம் ஆகி­யவை உள்ளன. இத்­து­டன், முத­லீ­டு­களை ஈர்க்­கக் கூடிய வசீ­க­ர­மும் ஒரு நாட்­டிற்கு தேவை. முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில், இந்­தியா சிறந்து விளங்­கு­கிறது. எனி­னும், கட்­டு­மா­னங்­களை திட்­ட­மி­டு­வது, குறித்த காலத்­தில் கட்­டு­மான பணி­களை முடிப்­பது போன்­ற­வற்­றில், இந்­தியா இன்­னும் சர்­வ­தேச நடை­மு­றை­களை முழு­மை­யாக பின்­பற்­றா­மல் உள்­ளது.

கட்­டு­மான துறை, அமைப்பு சார்ந்த துறை­யாக மாறி­னால், இந்­தி­யா­வின் வளர்ச்சி அதி­க­ரிக்­கும் என, ஆய்­வில் பங்­கேற்ற, 80 சத­வீ­தம் பேர் தெரி­வித்து உள்­ள­னர். அதே சம­யம், கட்­டு­மான துறை­யின் அனைத்து நிலை­க­ளி­லும், திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ள­தாக, பெரும்­பா­லா­னோர் கூறி­யுள்­ள­னர். பெரும்­பான்­மை­யான கட்­டு­மான நிறு­வ­னங்­கள், திட்­டங்­களை ஆழ­மாக புரிந்து கொண்டு மேம்­ப­டுத்த, போது­மான நிர்­வாக திற­னின்றி உள்ளன. கட்­டு­மான துறை­யில், திற­மை­யா­ன­வர்­களின் பற்­றாக்­கு­றையை போக்க, அரசு, தனி­யார் துறை­யு­டன் இணைந்து, தொழிற்­ப­யிற்சி திட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்­டும்.

இத்­த­கைய அம்­சங்­க­ளு­டன், இதர துறை­களின் வளர்ச்­சி­யும் சேரும் போது, இந்­தியா, வளர்ந்த நாடு­களின் வரி­சை­யில் இடம் பிடிக்­கும் என, 60 சத­வீ­தம் பேர் கருத்து தெரி­வித்து உள்­ள­னர். எனி­னும், ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­களில், 70 சத­வீ­தம் பேர், இந்­தியா, மிகச் சிறந்த முத­லீட்டு மைய­மாக உரு­வெ­டுத்­துள்ள போதி­லும், வளர்ந்த நாடாக முன்­னேற நீண்ட கால­மா­கும் என, கூறி­யுள்­ள­னர். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

இந்­தியா, வளர்ந்த நாடு­க­ளுக்கு நிக­ராக, கட்­டு­மான துறை­யில் வளர்ச்சி காண, ஐந்து முக்­கிய அம்­சங்­களில் கவ­னம் செலுத்த வேண்­டும். அவை:
* சீரிய நிர்­வா­கம் மற்­றும் கொள்கை அம­லாக்­கம்
* பயன்­த­ரக் கூடிய கட்­டு­மான மேலாண்மை
* புதிய கட்­டு­மான நடை­மு­றை­கள், தொழிற்­நுட்­பங்­கள் குறித்த விழிப்­பு­ணர்வு
* தர­மான பொருட்­கள் மற்­றும் கட்­டு­மான உத்­தி­கள்
* திற­மை­யான பணி­யா­ளர்­கள்
-அன்­ஷூ­மன் மேக­சின், தலை­வர், சி.பி.ஆர்.இ., இந்­தியா

மூலக்கதை