டிராக்டர்களுக்காக புதிய ‘ஆப்’ டாபே நிறுவனம் அறிமுகம்

தினமலர்  தினமலர்
டிராக்டர்களுக்காக புதிய ‘ஆப்’ டாபே நிறுவனம் அறிமுகம்

சென்னை : டிராக்­டர்ஸ் அண்டு பார்ம் எக்­கி­யுப்­மென்ட் நிறு­வ­ன­மான, ‘டாபே’ ராஜஸ்­தா­னில், டிராக்­டர்­கள் மற்­றும் பண்ணை இயந்­தி­ரங்­களை, விவ­சா­யி­கள் வாட­கைக்கு எடுப்­ப­தற்கு, ‘ஜே பார்ம் சர்­வீ­சஸ்’ எனும் மொபைல் செய­லியை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி மல்­லிகா ஸ்ரீனி­வ­சான் கூறி­ய­தா­வது: விவ­சா­யி­கள், ‘ஜே பார்ம் சர்­வீ­சஸ்’ எனும் மொபைல் ஆப்பை, பிளே ஸ்டோ­ரில் இருந்து, இல­வ­ச­மாக பதி­வி­றக்­கம் செய்து கொள்­ள­லாம். இதன் மூலம், விவ­சா­யி­கள் மிக சுல­ப­மாக, அரு­கில் உள்ள வாடகை நிலை­யங்­கள் வாயி­லாக, தங்­க­ளுக்கு தேவை­யான டிராக்­டர்­கள் உள்­ளிட்ட இயந்­தி­ரங்­களை, வாட­கைக்கு எடுத்­துக் கொள்­ள­லாம்.

மேலும், ராஜஸ்­தா­னில், டிராக்­டர் மற்­றும் விவ­சாய பொருட்­களை வாட­கைக்கு விடும் நிலை­யங்­க­ளு­டன் தொடர்பு கொண்டு, அறு­வ­டைக்கு தேவை­யான இயந்­தி­ரங்­களை விவ­சா­யி­கள் வாங்­கு­வ­தற்கு, இந்த ஆப் பயன்­படும். முதற்­கட்­ட­மாக, இந்த சேவை­யில், 450 வாடகை நிலை­யங்­களில், 25 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் இணைக்­கப்­பட்டு உள்­ள­னர்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை