‘பாயின்ட் ஆப் சேல்’ சாதனங்கள்; 3 மாதங்களில் 12.54 லட்சம் விற்பனை

தினமலர்  தினமலர்
‘பாயின்ட் ஆப் சேல்’ சாதனங்கள்; 3 மாதங்களில் 12.54 லட்சம் விற்பனை

புதுடில்லி : மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு, நவம்­ப­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை தொடர்ந்து, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­தது. இதன் விளை­வாக, ‘டெபிட், கிரெ­டிட்’ கார்­டு­கள் வாயி­லான பணப் பரி­வர்த்­த­னைக்கு உத­வும், ‘பாயின்ட் ஆப் சேல்’ சாத­னங்­கள் விற்­பனை அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டில், 12.54 லட்சம் சாத­னங்­கள் விற்­ப­னை­யாகி உள்ளன. 2016 நவ., 8 நில­வ­ரப்­படி, 15.19 லட்­சம் பாயின்ட் ஆப் சேல் சாத­னங்­கள் புழக்­கத்­தில் இருந்­தன. இந்­தாண்டு மார்ச் நில­வ­ரப்­படி, மொத்த சாத­னங்­கள் எண்­ணிக்கை, 27.73 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. கிரா­மங்­க­ளி­லும் மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, 2.04 லட்­சம் பாயின்ட் ஆப் சேல் சாத­னங்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கப்­பட்டு உள்­ளது. நாடு முழு­வ­தும், இவ்­வகை சாத­னங்­களின் பயன்­பாட்டை பர­வ­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை